தீ பற்றிய வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சிறுவன்: தப்பித்த இரண்டு பெண்கள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தென்கிழக்கு லண்டன் பகுதியில் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு லண்டன் அருகே Deptford பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர் 45 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் தீ பிடித்த வீட்டிற்குள் சென்று சோதனை மேற்கொள்ளும் பொழுது, மர்மமான முறையில் 7 வயது சிறுவன் இறந்து கிடப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுவனின் இறப்பில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தீ அணைப்பு படையினர், தீ விபத்தில் முதல் தளம் சிறிதளவு சேதமடைந்துள்ளது. ஆனால் இரண்டாவது தளம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது என தெரிவித்தனர். மேலும் தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, முதல் தளத்திலிருந்து குதித்த இரண்டு பெண்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்