பிரித்தானிய பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து: வானுயர எழும்பியதால் அதிர்ச்சியடைந்த வீரர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
167Shares
167Shares
ibctamil.com

பிரித்தானியாவில் இயங்கிவரும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தின் போது திடீரென வானுயர தீ எழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பிரித்தானியாவின் Swadlincote பகுதியில் இயங்கிவரும் Derbyshire பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் மூன்று மாவட்டங்களில் இருந்து விரைந்து வந்த 10 தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

இதில் ஈடுபட்ட 50 தீ அணைப்பு வீரர்கள் இரவு நேர பணிக்கு வந்த ஊழியர்கள் அனைவரையும் அங்கிருந்து மீட்டு அனுப்பியதோடு, நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

இதனிடையே திடீரென தீ 50 அடி உயரத்திற்கு எழுந்ததால் தீ அணைப்பு வீரர்கள் சிறிது அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து பேசிய தீயணைப்பு துறை தலைவர், விபத்தில் Ravensbourne பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 6 இலட்சம் ரொட்டி தட்டுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்