வாடகை டாக்ஸியால் £36,000 அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய இளைஞர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
297Shares
297Shares
Nallur-Travels-August-Promotion

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் வாடகை டாக்ஸியில் அங்குள்ள வேக கட்டுப்பாட்டை மீறிய பிரித்தானிய இளைஞருக்கு 36,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார் பிரித்தானிய இளைஞர் ஒருவர்.

அங்குள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிவரும் அவர் முகமது இப்ராஹிம் என்பவரிடம் இருந்து நாளொன்றிற்கு £560 கட்டணத்தில் Lamborghini கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நிலையில் வாடகை Lamborghini உடன் ஊர் சுற்ற புறப்பட்ட பிரித்தானிய இளைஞர் முக்கிய சாலைகளில் உள்ள வேக கட்டுப்பாடுகளை மீறியுள்ளார்.

இதனால் காரின் உரிமையாளரான முகமது இப்ராஹிம் என்பவரின் மொபைலில் எச்சரிக்கை தகவல் குவிந்துள்ளது.

மட்டுமின்றி அதற்கான அபராத கட்டணம் உள்ளிட்ட தகவல்களும் வந்துள்ளது. இதனால் அதிற்ச்சியடைந்த இப்ராஹிம், உடனடியாக அவருக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆனால் பிரித்தானிய இளைஞர் அதை கண்டுகொள்ளவில்லை என தெரிய வந்ததும், உடனடியாக அடுத்துள்ள காவல் நிலையம் சென்று தமது வாகனத்தை ரிமோட் மூலம் பூட்ட கோரியுள்ளார்.

மொத்தம் நான்கு மணி நேரம் மட்டுமே வாகனம் செலுத்திய பிரித்தானியரால் இப்ராஹிம் தற்போது பெருந்தொகை அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த வியாழனன்று குறித்த பிரித்தானியரிடம் இது தொடர்பாக பேசிய இப்ராஹிம், அபராத தொகையை செலுத்த கோரியுள்ளார்.

ஞாயிறன்று பணத்தை செலுத்துவதாக கூறிச் சென்ற பிரித்தானியரை இதுவரை காணவில்லை என இப்ராஹிம் மீண்டும் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்