பிரித்தானியாவில் குழந்தைகள் முன் மிகவும் நெருக்கமாக இருந்த ஜோடி! பளார் என்று அடிவிட்ட தந்தை வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா
577Shares
577Shares
ibctamil.com

பிரித்தானியாவில் இளம் ஜோடி ஒன்று குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, அங்கு மிகவும் நெருக்கமாக இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Leeds பகுதியில் Roundhay Park-ல் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர்கள் பலர் இருக்க மற்றும் சிறு வயதுடைய குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது மது அருந்திய இளம் ஜோடி ஒன்று பட்டப் பகலில் அந்த மைதானத்தில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனால் இது குறித்து தகவல் பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்ட போது, பொலிசார் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

இதையடுத்து அங்கிருந்த தந்தை ஒருவர் உடனடியாக அங்கு வேகமாக சென்று, அரைநிர்வாண நிலையில் இருந்த இளைஞரின் முகத்தில் ஒரு அடி விட்டுள்ளார்.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதும், மிகவும் அவர்கள் தாமதமாக வந்ததால், அந்த ஜோடி பார்க்கைவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்