மருமகனிடம் இருந்து மகளை பிரித்து காதலனுடன் சேர்த்து வைத்த தாய்! அதன்பின் நடந்த துயரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
571Shares
571Shares
ibctamil.com

இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் கொடுமைப்படுத்தும் மருமகனிடம் இருந்து மகளை தப்பிக்க வைத்து காதலருடன் சேர்த்து வைத்த தாயார் கத்தியால் குத்தப்பட்டு கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள Rochdale பகுதியில் குறித்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்பகுதியில் கணவர் மற்றும் தாயாருடன் குடியிருந்து வந்த 25 வயது அய்ஷா என்பவர் தமது தாயாரின் உதவியுடன் நீண்ட நாள் காதலரை கரம்பிடித்துள்ளார்.

இச்சம்பவம் அவரது கணவரான முஹம்மது தஃப்ஹாம் என்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் அய்ஷாவின் தாயாரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானியரான அய்ஷா திருமணம் முடிந்து 2016 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் குடியேறிய பின்னரும் தமது காதலரை சந்திப்பதை தொடர்ந்து வந்துள்ளார்.

தந்தையின் நிர்பந்தத்திற்கு வழங்கி உறவினரான தஃப்ஹாமை திருமணம் செய்து கொண்ட அய்ஷா, கடந்த 3 ஆண்டுகளாக கடும் சித்திரவதையை அனுபவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் மகளின் கண்ணீரைக் கண்டு மனம் நொந்த தாயார் ரஹமான் பேகம், வாழ்க்கையை நாசமாக்கி விடாதே, இங்கிருந்து தப்பித்துக் கொள் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி 4- ஆம் திகதி பிராட்போர்டு பகுதியில் குடியிருக்கும் தமது நீண்ட நாள் காதலரோடு சென்றுள்ளார் அய்ஷா.

இந்த நிலையில் அய்ஷா சென்ற இரண்டாவது நாள் வீட்டு சமையலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஹ்மான் பேகத்தின் உடலை கைப்பற்றினர்.

உடற்கூறு சோதனையில், கத்தியால் தாக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட காயத்தால் ரஹ்மான் பேகம் இறந்துள்ளது தெரியவந்தது.

இதனிடையே இந்த கொலைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், வீணாக தம்மை சிக்க வைக்கும் முயற்சி இதுவெனவும் தஃப்ஹாம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்