இளம் தலைமுறையினர் பிரித்தானிய குடியுரிமை பெறுவதில் சிக்கல்!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இங்கிலாந்தில் அதிரடி கட்டண அதிகரிப்பால் ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.

இது தற்போது 1,012 பவுண்ட்ஸ் என அதிகரித்துள்ளது. இதனால் குடியுரிமைக்கு தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளந்தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய குழந்தைகளின் எதிர் காலத்தை அரசு சுரண்டுவதாகவும், ஏற்றுக்கொள்ளவே முடியாத வருவாயை அரசு இதன்மூலம் ஈட்டிவருவதாகவும் பொதுமக்கள் குமுறத் தொடங்கியுள்ளனர்.

குடியுரிமை பெறாத பிரித்தானிய இளஞர்களால் உயர் கல்வியில் நடைமுறை தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி வேலை கிடைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

மேலும் குடியுரிமை பெறாமல் வளரும் பிள்ளைகள் பாதுகாப்பின்மையை உணர்வதுடன் எஞ்சிய நண்பர்களுக்கு இருக்கும் உரிமை தமக்கு இல்லாததை மெதுவாக புரிந்து கொள்வார்கள் என சமூக ஆர்வலர் ஒருவர் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

இது அவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பது மட்டுமல்ல கடும் கண்டனத்துக்கு உரியது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டண உயர்வானது மிக குறைந்த வருவாய் ஈட்டும் புலம் பெயர்ந்த குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும் என கூறும் ஆர்வலர்கள்,

அவர்களை கடனாளியாக்கும் அல்லது பட்டிணி கிடக்கும் நிலைக்கு தள்ளும் என்கின்றனர். 5 வயதாகும் முன்னரே பிரித்தானியாவில் குடியேறிய 19 வயது Katara, மாணவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்காக தமது சகோதரி விண்ணப்பித்தபோது, குடியுரிமை இல்லாதவற்கு கடன் வழங்க முடியாது என மறுத்துள்ளதை நினைவு கூர்ந்துள்ளார்.

இதுபோன்று பல்வேறு குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த கட்டண உயர்வானது அரசின் திட்டமிட்ட கொள்ளை எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers