லண்டனில் உள்ள விஜய் மல்லையா வீட்டில் இருக்கும் தங்க கழிப்பறை: என்ன விலை தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் மேன்சனில் தங்க கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு பிரித்தானியாவுக்கு தப்பிசென்றார்.

இந்தியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறார்கள்.

இதோடு நீதிமன்றத்திலும் அவர் மீதான வழக்குகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லண்டனில் உள்ள மல்லையாவின் மேன்சனில் தங்கத்தால் ஆன கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.

பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ மல்லையா மேன்சனுக்கு சென்ற நிலையில் இதை பார்த்துள்ளார், இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்த கழிப்பறையின் சரியான விலை குறித்த விபரம் வெளியாகவில்லை என்றாலும் இதன் விலை கோடிகளில் இருக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...