பிரித்தானியாவில் வெறும் £1 பணத்தில் ஏலத்துக்கு வரும் வீடு: என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் வெறும் £1-ஐ ஆரம்ப விலையாக கொண்டு வீடு ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளது.

Newcastle நகரில் தான் மூன்று படுக்கைறைகள் கொண்ட குறித்த வீடு அமைந்துள்ளது.

இதன் தொடக்கவிலையாக £1 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் £10,000 லிருந்து £13,000 வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீட்டை வாங்கினால் பல விடயங்களை சீரமைக்க வேண்டியுள்ளது.

இந்த வீட்டு கட்டிடத்தின் மேற்க்கூரையில் ஓட்டை இருப்பது, சுவர்கள் சேதமடைந்திருப்பது போன்ற விடயங்களை சரி செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.

வீட்டை அழகாக சீரமைத்துவிட்டால் இதன் மூலம் மாதம் £400லிருந்து £500 வரை வாடகை வரலாம் என ஏல நிறுவனமான reckons தெரிவித்துள்ளது.

வீட்டின் அருகிலேயே இரண்டு பள்ளிக்கூடங்கள் உள்ளதோடு 2.4 மைல் தூரத்தில் ரயில் நிலையமும் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

வீட்டை வாங்க விருப்பமுள்ளவர்கள் வரும் 20-திகதி நேரில் சென்று பார்க்கலாம் எனவும், அதற்கு பின்னர் ஓன்லைன் ஏலத்தில் 23-ஆம் திகதி வரை பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்