4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு! இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல், இளவரசியாக வேண்டும் என்ற தன்னுடைய கனவு நனவாகியுள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் மிகப்பெரிய நடிகையாக வலம்வந்த மேகன் மெர்க்கல், இளவரசர் ஹரியை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் அரச குடும்பத்தில் இளவரசியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மெர்க்கல், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், பெண்களுக்கு சிறு வயதில் இருந்தே இளவரசியாக வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். வளர்ந்ததும் அதனை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உழைப்பை பெரிதுபடுத்துவார்கள்.

அதுபோல எனக்கும் 1985-ம் ஆண்டு வெளியான கார்ட்டூன் சீரியல் ஒன்றில் இடம்பெற்றிருக்கும் She-Ra கதாபாத்திரம் போல பெரிய இளவரசியாக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

4 வருடங்களுக்கு முன்பு கூட, இளவரசியாக இருப்பதைப்போல் நான் கண்ட கனவு குறித்து, "தி டிக்" என்ற என்னுடைய இணையதளத்தில் பதிவிட்டிருந்தேன்.

அப்போது அடிக்கடி எனது நண்பர்களிடம், இளவரசி kate அனுபவித்து வரும் ஆடம்பர வாழ்க்கை மற்றும் அவரை சுற்றியுள்ள அரச குடும்ப சூழ்நிலை குறித்து பேசிக்கொண்டே இருப்பேன் என மனம் திறந்து பேசியுள்ளார்.

முன்னதாக ஹரி - மெர்கல் சந்திப்பு ஜூலை 2016-ம் ஆண்டு நிகழ்ந்தது என்பதும், அவர்களை காதல் தீவிரமானதை அடுத்து மெர்க்கல் இணயத்தளத்தை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்