பெண் நோயாளிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த மருத்துவர்: பாதிக்கப்பட்ட சொந்த மகள்! திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண் நோயாளிகளை அவர்களுக்கு தெரியாமல் 19000 வீடியோக்கள் எடுத்த மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sunderland-ஐ சேர்ந்தவர் தாயிர் அல்டாய் (55) மருத்துவரான இவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதில் பலரை ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக படம் எடுத்துள்ளார்.

ஒரு பெண்ணை அல்டாய் நைசாக வீடியோ எடுத்த போது அதை அவர் கண்டுப்பிடித்த நிலையிலேயே இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் அல்டாயை கைது செய்தனர்.

பெண் நோயாளிகளை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.

அல்டாயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நோயாளி கூறுகையில், என் வாழ்க்கையில் அல்டாய் ஏற்படுத்திய பாதிப்பு மிகப்பெரியது. அவரின் செயலால் நான் உடைந்து போய்விட்டேன் என கூறியுள்ளார்.

விசாரணையில் அல்டாயின் மூத்த மகளும் தந்தையின் செயலால் பாதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அல்டாய் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு 10 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்