இளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மாமனாரான தாமஸ் மெர்க்கல் தனது மகளை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வருவதற்கு ஹரிதான் காரணம் என்று இளவரசி டயானாவின் பாதுகாவலரான Ken Wharfe (69) குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மகளின் திருமண நேரத்திலிருந்தே தாமஸை சுற்றி பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பாப்பராசிகள் அவரை பின் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்.

அவரைக் குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டே இருந்தன.யாரும் அவரை கவனித்துக் கொள்ளவில்லை.

ஹரிக்கு இந்த பிரச்சினைகளை அணுகத் தெரியும், ஆனால் தாமஸ்க்கு தெரியாது. ஆகவே ஹரிதான் ஏதாவது செய்திருக்க வேண்டும்.

அவர் அரண்மனை அலுவலர்களுக்கு ஒரு வேளை இவற்றைக் குறித்து அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதை தொடர்ந்து செய்திருக்க வேண்டும்.

ஹரி தனது மாமனாரின் மீது இரக்கப்படுவதாக மட்டுமே கூறினார்.

நாம் தாமஸை தவறுகள் செய்யும் ஒருவர் என்று தள்ளி விட முடியாது. அவருக்கு சரியான ஆலோசனைகள் கூற ஆளில்லை.

கண்டிப்பாக இத்தகைய பிரச்சினைகள் வரும் என்பது ஹரி மேகனுடனான தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தபோதே ராஜ குடும்பத்தினருக்கு தெரிந்திருக்கும்.

தாமஸ் ஒரு சாதாரண மனிதர், விவாகரத்தானவர், திடீரென அவரது மகள் ஒரு இளவரசரை மணக்க இருக்கிறார்.

அப்படியானால் அப்போதே அவருக்கு இந்த விடயங்கள் குறித்து ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், இது தாமஸ்க்கு மட்டுமல்ல அவரது மொத்த குடும்பத்திற்கும் பொருந்தும்.

அப்படி சரியாக ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது என்னும் Ken அதனால் ஹரி நினைத்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்