25 வயதுக்கு முன் யாரையாவது கொல்ல வேண்டும்: பிரித்தானிய கொலைகாரியின் வாக்குமூலம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

25 வயதுக்கு முன் யாரையாவது கொல்ல வேண்டும் என்னும் ஆசை நாளுக்கு நாள் என்னுள் அதிகரித்து கொண்டே இருந்தது என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளாள் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு கொலைகாரி.

Jemma Lilleyக்கு கொடூர கொலைகள் புரியும் படங்கள் பார்ப்பதும் வகை வகையாய் கத்திகள் சேகரிப்பதும் அவ்வளவு பிடித்த விடயம்.

எப்போது கொலை செய்வதைக் குறித்த கற்பனை அவளது மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்திற்கு மேல் யாரையாவது கொல்ல வேண்டும், அதுவும் 25 வயதுக்கு முன் யாரையாவது கொல்ல வேண்டும் என்னும் ஆசை அதிகமாகிக் கொண்டே வந்தது.

தன்னுடன் முறை தவறிய உறவு வைத்துக் கொள்ளும் தனது அறைத் தோழியான Trudi Lenonஉடன் இணைந்து தனது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தாள் அவள்.

Lenonஇன் மகனின் நண்பனான Aaron Pajich-Sweetmanஐ (18) கொலை செய்ய முடிவு செய்தனர் இருவரும்.

Aaron Pajich-Sweetman ஆட்டிஸக் குறைபாடு கொண்டவராதலால் அவரைக் கொலை செய்வது பிரச்சினை குறைவான விடயம் என்று முடிவு செய்துள்ளனர் இருவரும்.

கதறித் துடிக்கும் ஒரு ஆளின் இரத்தம் பீறிட்டு வருவதையும் சாலைகள் முழுவதும் இரத்தத்தால் சிவப்பாக மாறுவதையும் பார்க்க துடிக்கிறேன் என்று Jemma செய்தி அனுப்ப, இதுதான் சரியான நேரம் நீயும் தயார், நானும் தயார் என அவளது காதலி செய்தி அனுப்பியிருக்கிறாள்.

Aaronஐ வீட்டுக்கு வரவழைத்து அவனை ரசித்து ரசித்து கொலை செய்திருக்கிறார்கள் இருவரும்.

25 வயதுக்கு முன் யாரையாவது கொல்ல வேண்டும் என்னும் ஆசை நாளுக்கு நாள் என்னுள் அதிகரித்து கொண்டே இருந்தது என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த Jemmaவுக்கும் அவளது காதலிக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்