லண்டனில் இரயில் நிலையத்திற்கு வெளியே திடீர் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் காயம்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் இரயில் நிலையத்திற்கு வெளியே திடீரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kingsbury-ல் உள்ள இரயில் நிலையத்திற்கு வெளியில் இன்று இரவு உள்ளூர் நேரப்படி 9.45 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக மூன்று பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், தங்களுக்கு சரியாக 9.45 மணிக்கு மேல் இது சம்பவம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து ஆம்புலன்சுடன் அங்கு சென்றோம்.

அங்கு காயமடைந்த நபர்களை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டோம்.

ஆனால் இது தொடர்பாக தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு எப்படி நடந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் லண்டனில் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே கத்திக் குத்து சம்பவம் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்றவைகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers