பாதுகாவலரின் இடுப்பைத் தொட்ட பிரித்தானியர்: கிடைத்த பயங்கர தண்டனை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வாக்குவாதம் ஒன்றின்போது பாதுகாவலர் ஒருவரின் இடுப்பைத் தற்செயலாக தொட்டதற்காக கைது செய்யப்பட்ட ஒரு பிரித்தானியர் நாற்றம் பிடித்த சிறைச்சாலை ஒன்றில் சரியான உணவோ எந்த அடிப்படை வசதிகளோ இல்லாமல் சிக்கித் தவித்த விடயம் வெளியாகியுள்ளது.

துபாயில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்தில் மேனேஜராக பணி புரிபவர் John Murphy (52).

இவர் பிரித்தானியாவை சேர்ந்தவர் ஆவார்.

அந்த கட்டிடத்தின் பாதுகாவலர்களுடன் ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டபோது இரு பலசாலிகளான பாதுகாவலர்கள் அவரை இருவருக்கும் இடையே வைத்து நெருக்க, தப்புவதற்காக ஒருவரது இடுப்பைப் பிடித்துத் தள்ளியுள்ளார்.

தன்னுடன் தகராறு செய்ததற்காக அவர் அந்த பாதுகாவலர்கள்மீது பொலிசில் புகாரளிக்க அவர்கள் பதிலுக்கு அவர் மீது பாலியல் புகாரளித்துள்ளனர்.

பின்னர் நடந்ததுதான் பயங்கரம், Murphyயைக் கைது செய்த பொலிசார் அவரை காவலில் அடைத்தனர். மொழி புரியாத இடத்தில் விசாரிக்கப்பட்ட அவர் அங்கேயே 10 நாட்கள் அடைத்துவைக்கப்பட்டார்.

அசைய முடியாதபடி சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்ட அவருக்கு அந்த பத்து நாட்களும் சோப்போ டவலோ கூட கொடுக்கப்படவில்லை.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார் Murphy. அங்கு நிலைமை அதை விட மோசம். வெப்பம் மிகுந்ததாகவும் நாற்றம் பிடித்ததாகவும் இருந்த அந்த சிறையில் உண்ண அழுகிய முட்டைகோஸ் மட்டுமே கொடுக்கப்பட்டதாம்.

படுக்க இடமில்லாததால் ஒருவர் சற்று நேரம் தூங்க, பின்னர் அவர் எழுந்ததும் அடுத்தவர் தூங்குவார்களாம். ஆறு வாரங்களுக்குப் பின் ஜாமீனில் வெளிவந்துள்ள Murphy, தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்துள்ளார்.

மனித உரிமை அமைப்புகள் அபுதாபி அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி Murphyயின் உண்மை நிலவரத்தை எடுத்துரைக்க

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers