கார் திருடனை பிடிக்கும் அவசரத்தில் ஆடையின்றி நிர்வாணமாக தெருவில் ஓடிய உரிமையாளர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் கார் திருடனை பிடிக்கும் அவசரத்தில் ஆடை கூட இல்லமால், காரின் உரிமையாளர் நிர்வாணமாக தெருவில் ஒடியுள்ள காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பிரித்தானியாவில் Essex பகுதியை சேர்ந்த Stephen Canny (33) என்பவர் தன்னுடைய வருங்கால மனைவி Susie Prynne (39) உடன் அன்றைய தினம் இரவு, 3 வாரங்களில் நடக்க உள்ள தங்களுடைய திருமணம் குறித்து பேசி திட்டமிட்டுக்கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது திடீரென Stephen-ன் Range Rover காரிலிருந்து அலாரம் சத்தம் கேட்டுள்ளது. அதேசமயம் காரின் விளக்குகளும் எரிந்துள்ளன.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த Stephen, திருடனை பிடிக்கும் அவசரத்தில் ஆடை கூட உடுத்தாமல், நிர்வாணமாக காரை நோக்கி ஓடியுள்ளார். உரிமையாளர் வருவதை அறிந்த கார் திருடன் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினான்.

வீட்டின் சிசிடிவியில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியினை அவரது காதலி, முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, நள்ளிரவில் யாரோ எங்களுடைய காரினை திருட முயற்சி செய்தனர். உடனடியாக என்னுடைய காதலன் நிர்வாணமாக ஓடி சென்று காரை மீட்டார். ஆனால் இனிமேல் அவசரத்தில் இதுபோன்று அவர் செய்யமாட்டார் என நம்புகிறேன் என பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்திருந்த Stephenம், நாளை இரவும் அவன் காரை திருட வந்தால், நான் இப்படி தான் நிர்வாணமாக ஓடுவேன் என பதிலளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்