'நாம எல்லாருமே சாக போறோம்': விமானத்தில் திடீரென கத்திய பெண்.. அச்சத்தில் உறைந்த பயணிகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் தரையிறங்கவிருந்த விமானத்தில், பெண் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டன் கிழக்கு மிட்லண்ட் விமான நிலையத்தில், தரையிறங்குவதற்கு ஆயத்தமான Jet2 விமானத்தில் Kiran Jagdev என்ற 41 வயதான பெண் ஒருவர் அதிகமான மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

விமானத்தில் ஏறும்போதே அளவிற்கு அதிகமான மது அருந்தியிருந்ததால், அவருக்கு மது அளிக்க வேண்டாம் என விமான ஊழியர்கள் கூறியிருந்தனர். விமானத்தின் உள்ளே சென்ற Kiran, தன்னுடைய 15 வயது மகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே இருந்த இருக்கையை ஓங்கி மிதித்துள்ளார்.

பின்னர் திடீரென "நாம் எல்லோருமே இறக்க போகிறோம்" என சத்தமிட்டுள்ளார். இதனை பார்த்த சக பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளதோ என நினைத்து அச்சமடைந்துள்ளனர்.

ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் போதையில் தான் இப்படி சத்தமிட்டுள்ளார் என்பதை புரிந்து கொண்டு அவரை அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதனை பொருட்படுத்தாத Kiran தொடர்ந்து சத்தமிட்டுள்ளார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார் ஒருவர் Kiran-ஐ சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, விமானம் தரையிறங்கிய உடனே Kiran கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது, Kiran நல்ல குணம் படைத்தவர். கடந்த 2015-ம் ஆண்டு kiran குழந்தை வயிற்றிலே இறந்துவிட்டது. அதனை தொடர்ந்து அவருடைய கணவரும் பிரிந்து சென்றதால் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என Kiran தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

பின்னர் வழக்கின் இறுதியில் Kiran-ஐ எச்சரித்து நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த Kiran, தான் செய்த தவறுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கோரினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்