இளவரசர் ஹரி - மெர்க்கல் வீட்டிற்கு வந்திருக்கும் புதிய வரவு! யார் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மெர்க்கல் புதிய நாய் ஒன்றினை குடும்பத்தில் தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஹரி, கடந்த மே மாதம் மெர்கலை திருமணம் செய்துகொண்டு கென்சிங்டன் அரண்மனையில் குடியேறிய பின்னர் முதன்முறையாக labrador வகை ஒன்றினை தத்தெடுத்துள்ளனர்.

அந்த நாய் அரண்மனை மற்றும் Cotswolds பகுதியில் அமைந்திருக்கும் அவர்களது சொந்த வீட்டில் இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஏற்கனவே இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்த போது Guy என்ற நாயினை தத்தெடுத்தனர்.

அதற்கு முன்னதாக மெர்கல் வளர்த்து வந்த Bogart என்ற நாய் தற்போது கனடாவின் டொராண்டோ நகரில் வசிக்கும் அவரது நண்பர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஹரி- மெர்கல் தம்பதிக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் என அனைவரும் எதிர்பாத்திருக்கும் வேளையில், மெர்கல் "நாய் தான் தனக்கு மிகவும் நெருங்கிய நண்பன்" என கூறி வருகிறார்.

அதற்கு ஏற்றார் போல பெரிய குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்பாத ஹரி, அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்