வீட்டிலேயே பெண்கள் கருக்கலைப்பு செய்யலாம்: பிரித்தானியாவில் வரும் அதிரடி சட்டம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பத்து வாரத்துக்கும் குறைவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டிலேயே கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற சட்டம் விரைவில் வரவுள்ளது.

வீட்டில் கருக்கலைப்பு செய்யும் சட்டம் கடந்தாண்டு ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பிரித்தானியாவில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டபூர்வமாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அதே சமயம் வடக்கு அயர்லாந்தில் எந்த சூழலிலும் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமாகவே உள்ளது.

வீட்டில் கருக்கலைப்பு செய்வது என்பது இரண்டு விதமான மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது இதை மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களின் கண்காணிப்பின் பேரிலேயே கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்கிறார்கள்.

வலி, இரத்தப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற விடயங்கள் ஏற்படலாம் என்பதாலேயே மருத்துவமனையில் இது செய்யப்பட்டது.

ஆனால் சமீபத்திய ஆய்வில் இந்த முறையை வீட்டிலிருந்து செய்தாலும் பாதுகாப்பானதாகவே இருக்கும் என தெரியவந்துள்ளது.

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய முறையின் கீழ் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் இரண்டாவது மாத்திரையை வீட்டிலேயே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்து சுகாதார அமைச்சர் சில சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்