லண்டன் வீதியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: கவலைக்கிடமாக கிடந்த இளைஞர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டன் வீதியில் மர்ம கும்பல் ஒன்று, இளைஞர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் Roupell சாலையில் இளைஞர் ஒருவர் மீது மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட இளைஞருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் படுகாயமடைந்த இளைஞருக்கு 23 வயது இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், நடப்பாண்டில் மட்டும் லண்டன் பகுதியில் நடைபெற்று வரும் கத்திக்குத்து சம்பவங்கள் 16 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்