லண்டன் வீதியில் இளைஞர் குத்திக்கொலை: பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டன் நகரில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நடப்பாண்டில் மட்டும் 101 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் செய்தி வெளியிட்டுள்ளனர்.

லண்டனின் Deptford பகுதியில் உள்ள Creek சாலை அருகே நேற்று இரவு 11.45 மணிக்கு 20 வயதுள்ள இளைஞர் படுகாயங்களுடன் வீதியில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கத்தியால் குத்தப்பட்டு ரத்த காயங்களுடன் கிடந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

12.40 மணிக்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இளைஞர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பொலிஸார் தரப்பில் தெரிவிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாகவே லண்டன் வீதியில் நடைபெறும் கத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வயதான பெண் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டபோது, லண்டன் நகரில் நடப்பாண்டில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருந்தது, தற்போது 101 ஆக அதிகரித்துள்ளது என செய்தி வெளியிட்டுள்ளனர்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்