இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடி கைது!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்து கால்பந்து அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்த Paul Gascoigne, பெண் மீதி பாலியல் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான Paul Gascoigne (51), தேசிய அணிக்காக 58 முறை விளையாடி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

இறுதியாக இவரது மனைவி Sara Lovatt,(49) விவாகரத்து பெற்ற பின்னர், மது போதைக்கு அடிமையாகி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார். சமீபத்தில் கூட பொது இடம் ஒன்றில் நிர்வாணமாக கிடந்தது சர்ச்சைக்குள்ளானர்.

இந்த நிலையில் Durham ரயில் நிலையம் அருகே, மது போதையில் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக Paul மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர்.

மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்