காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற கொடூர தாய்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம் பெண்ணொருவர் முன்னாள் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற வழக்கில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

Liskeard நகரை சேர்ந்தவர் அபிகைல் லெதர்லேண்ட் (26). இவருக்கு 22 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் கடந்தாண்டு தனது முன்னாள் காதலன் தாமஸ் கர்டுடன் சேர்ந்து தனது குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளார் அபிகைல்.

அபிகைலின் குழந்தை படுகாயங்களுடன் வீட்டில் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்த நிலையில் குழந்தையை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இவ்வழக்கு விசாரணை முடிந்து தாமஸும், அபிகைலியும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது கொலை வழக்கு தற்போது உறுதியாக பதியப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிமன்ற விசாரணையை இருவரும் எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers