தாய் தற்கொலை செய்துகொண்டது கூட தெரியாமல் 4 நாட்களாக வீட்டில் இருந்த குழந்தை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
245Shares
245Shares
ibctamil.com

பிரித்தானியாவில் தாய் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனது கூட தெரியாமல் 3 வயது சிறுமி நான்கு நாட்களாக வீட்டில் உலாவியுள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவின் Talbot பகுதியை சேர்ந்தவர் Aimee Louise Evans (28). இவருக்கு ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் Louise-ன் கணவருடன் வசித்து வருகிறார்.

Louise கடந்த ஏப்ரல் 3-ம் திகதியன்று தன்னுடைய அம்மா ஜூலிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், அம்மா என்னுடைய மகளை வந்து அழைத்து செல்லுங்கள். நான் என்னுடைய வாழ்க்கையை முடித்து கொள்ள போகிறேன் என குறிப்பிட்டிருந்துள்ளார்.

அதற்கு அவருடைய அம்மா, முட்டாள் தனமாக எதுவும் செய்யாதே. என்ன நடந்தது என கேட்டு பதில் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு Louise-டம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அடுத்த மூன்று நாட்களாக Louise-ஐ தொடர்பு கொள்ள ஜூலி தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளார்.

முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததையடுத்து ஏப்ரல் 7-ம் திகதியன்று ஜூலி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது, Louise தன்னுடைய படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் தாய் இறந்தது கூட தெரியாமல் வீட்டில் இருந்த, 3 வயது குழந்தையை மீட்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், 3 அல்லது 4 நாட்களாக குழந்தை வெறும் பிரெட் மற்றும் அப்பங்களை மட்டும் தின்று உயிருடன் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக வழக்கினை விசாரித்து வந்த Morris என்ற காவல்துறை அதிகாரி, பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சம்பவம் நிகழ்ந்த அன்று Louise அதிகமான மது போதையில் இருந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு வேறு யாரும் காரணமில்லை என அறிக்கையினை சமர்ப்பித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்