ஹரி கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாரா?: வீடியோவை வைரலாக்கிய பிரித்தானியர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மனைவியின் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரது முதுகை தடவும் ஒரு வீடியோவை பிரித்தானியர்கள் வைரலாக்கிவிட்டார்கள்.

தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் கலந்து கொண்டனர்.

பெரும்பாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் மேகன் தனது அன்பைக் காட்டும் விதமாக ஹரி மீது சாய்ந்து கொள்வதும் வரது கையைப் பிடித்துக் கொள்வதும் வழக்கம்.

ஆனால் இம்முறை ஒரு மாறுதலாக ஹரி தனது மனைவியின் முதுகைத் தடவி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதைப் பார்த்த ராஜ குடும்ப ரசிகர்கள் அதை புகழ்ந்து தள்ளி விட்டனர். அருமை, அருமை, இப்போது ஹரியும் மேகன் மீது அதிக அன்பு காட்ட ஆரம்பித்து விட்டார் என்று ஒருவர் ட்வீட்ட, இன்னொருவர் அவர்கள் ராஜ குடும்பத்தினரோ இல்லையோ, அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், உங்கள் மனைவியை நேசிக்கிறீர்களா, அதை அவளுக்கு புரியச் செய்யுங்கள் என்று ட்வீட் ஒன்றை இட்டார்.

லிவர்பூலைச் சேர்ந்த Scarlett Mathison (10) என்னும் ஒரு சிறுமி, உடல் நலமற்ற, நடமாட இயலாத தனது மூத்த சகோதரியை நன்றாக கவனித்துக் கொள்வதற்காக அவளுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது.

அந்த சிறுமியிடம் பேசும்போதுதான் ஹரி இவ்வாறு நடந்து கொண்டார். உடல் மொழி வல்லுநர்கள் ஹரியும் மேகனும் நடந்து கொள்வதைக் குறித்து அவர்களுக்கிடையே உறுதியான ஒரு பிணைப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers