பிரித்தானியாவில் திருமணம் முடிந்த புதுமணத் தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்! என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா
446Shares
446Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் திருமணம் முடிந்த புதுமணத்தம்பதியினர் தங்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்ற போது, விபத்தில் சிக்கியதால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரித்தானியாவின் Berkshire பகுதியில் இருக்கும் Newbury-ஐ சேர்ந்த தம்பதி Chelsea Harvey(23)- Shane Harvey(27).

கடந்த மார்ச் மாதம் இந்த தம்பதி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் Chelsea Harvey கர்ப்பமானார்.

இந்நிலையில் ஆறு மாதம் கழித்து இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை Thatcham பகுதியில் வைத்துள்ளனர். இதனால் உறவினர்கள் அனைவரையும் அழைத்திருந்தனர்.

அப்போது வரவேற்பு நிகழ்ச்சிக்காக புதுமணத் தம்பதியினர், தங்களுடைய சிவப்பு நிற ஸ்கோடா காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் கார் பனிப்பொழிவின் காராணமாக விபத்தில் சிக்கியுள்ளது.

இதனால் காரில் இருந்த புதுமணத்தம்பதியினர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாததால், சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி பகுதிக்கு சென்றுள்ளனர்.

தங்கள் வரவேற்பு நிகழ்ச்சியை நிகழ்ச்சியை உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இது குறித்து Chelsea Harvey கூறுகையில், இது உண்மையிலே ஒரு அதிர்ஷ்டம் என்று தான் கூறவேண்டும், நான் என் கணவர், வயிற்றில் இருக்கும் குழந்தை பத்திரமாக உயிர் பிழைத்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்