டயானா விவாகரத்து செய்யவே விரும்பவில்லை: அவருக்கு நெருக்கமான ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
195Shares
195Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசி டயானா விவாகரத்து செய்யவே விரும்பவில்லை, திருமண வாழ்வில் தொடரவே அவர் விரும்பினார் என டயானாவின் முன்னாள் பயிற்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முறையற்ற உணவுப் பழக்கம் முதல், இளவரசர் சார்லசைப் பிரிந்ததால் ஏற்பட்ட துக்கம் வரை பல விடயங்களிலிருந்து வெளி வர டயானாவுக்கு உதவியதாக அவரது தனிப்பட்ட பயிற்சியாளராக இருந்த Jenni Rivett தெரிவித்துள்ளார்.

அவரது திருமணத்தின் இருண்ட காலத்தில் அவரோடு தனியாக நேரம் செலவளித்ததோடு, வாரத்திற்கு மூன்று நாட்கள் என ஏழு வருடங்களுக்கு பயிற்சியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இருவரும் சேர்ந்து இருக்கும் நேரங்களில் தனது விவாகரத்து குறித்து பேசும் டயானா, தான் விவாகரத்து செய்வதை விரும்பவே இல்லை என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிய வேண்டும் என விரும்பியது தான் இல்லை என்றும் டயானா கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் எப்போதுமே வேல்ஸ் இளவரசியாக, மக்களின் இதயங்களில் ராணியாக, ஒரு நல்ல தாயாக, ஒரு நல்ல மனைவியாக இருக்கவே விரும்பியதாக Jenni Rivett தெரிவித்துள்ளார்.

சார்லசும் டயானாவும் 1981ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 1996ஆம் ஆண்டு அவர்கள் பிரிந்ததோடு டயானாவும் கோர விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்வை மேற்கொள்ளவே டயானா விரும்பியதாகவும் Jenni Rivett தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்