16 வயதுக்குள் 100 பேரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி, 15 வயதில் தாயான பரிதாபம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
295Shares
295Shares
lankasrimarket.com

16 வயதுக்குள் 100 பேரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு சிறுமி, 15 வயதில் தாயான பரிதாபம் பிரித்தானியாவில் அரங்கேறியுள்ளது.

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எட்டு ஆசியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு ஒன்றின்போது அவளது வாக்குமூலம் இடம்பெற்ற வீடியோ ஒன்று திரையிடப்பட்டது.

16 வயதுக்குள் அந்த சிறுமி 100 ஆண்களுக்கிடையே மாறி மாறி அனுப்பப்பட்டு, முறை வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறாள்.

1998 முதல் 2001 வரை, அதாவது அவள் 13 வயதாக இருக்கும்போதிலிருந்து துஷ்பிரயோகிக்கப்பட்டிருக்கிறாள்.

Salah El-Hakam

உண்மையாகக் கூற வேண்டுமானால் எனது 16ஆவது வயதுக்குள் நான் 100 ஆசியர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அவர்களில் சிலரை மீண்டும் நான் பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார் அந்த சிறுமி.

Tanweer Ali (37), Mohammed Imran Ali Akhtar (37), Salah El-Hakam (39), Nabeel Kurshid (34), Iqlak Yousaf (34), Ajmal Rafiq (38), Asif Ali (33) மற்றும் பெயர் வெல்ளியிடப்படாத ஒருவர் உட்பட எட்டு பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணை தொடர்கிறது.

Nabeel Kurshid And Iqlak Yousaf

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்