மனமுடைந்த மெர்க்கலிற்காக ரகசிய பயணம் மேற்கொண்ட தாய்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தாமஸ் மெர்கலின் பல்வேறு விமர்சனங்களால் மனம் உடைந்து போய் இருக்கும், மேகன் மெர்க்கலிற்கு ஆறுதல் கூறுவதற்காக அவருடைய தாய் ரகசியமாக பிரித்தானியாவிற்கு சென்று வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் தந்தை தாமஸ் (74), இதய அறுவை சிகிச்சையால் மகளுடைய திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை.

மே 19-ம் தேதி ஹரியை திருமணம் செய்தது முதலே, தாமஸுடன் பேசுவதை மெர்க்கல் நிறுத்தி விட்டார். இதுகுறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில், நான் மாரடைப்பில் இருந்து மீள்வதற்காக ஒரு வார காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அவர்களிடம் இருந்த வந்த போன் கால் என்னை மிகவும் காயமடைய செய்தது. நான் அவர்களால் மதிக்கப்படாததை போல உணர்ந்தேன் என பேட்டியளித்திருந்தார்.

தாமஸின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சை பேட்டிகளை கொடுத்து வந்தார். இதனால் மெர்க்கல் பெரிதும் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனால் மனக்கவலையில் இருந்த மகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக அவருடைய தாயும், சமூக நல சேவகருமான Doria Ragland ரகசியமாக பிரித்தானிய வந்ததாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் வசித்து வரும் Doria, ஹெலிகாப்டர் உதவியுடன் ரகசியமாக, 4 அறைகளை கொண்ட ஹரியின் காட்டேஜில் மகளை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், அவருக்கு பக்கபலமாக இருப்பேன் என வாக்குறுதி கொடுத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த சந்திப்பு மிகவும் ரகசியமாக நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரண்மனை வட்டாரங்கள் கூறுகையில், மெர்க்கலிற்கு தன்னுடைய தந்தை தாமஸ் மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும், அவரிடம் சிறிது நாட்கள் இடைவெளி விட்டு இருக்க விரும்புவதாக தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers