நடுவானில் உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலாப்பயணி: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து Ibiza நோக்கி சென்ற விமானத்தில், அதிகமான போதைப்பொருள் உட்கொண்டதால் பிரித்தானிய பயணி நடுவானில் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவின் மான்செஸ்டரிலிருந்து Ibiza நோக்கி ஜெட்2 விமானம் நேற்று கிளம்பியது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென, 30 வயது மதிக்கத்தக்க பிரித்தானிய ஆண் உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டார்.

இதனால் Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் அவசரமாக பிரான்ஸ் நாட்டின் Toulouse விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Ibiza-விற்கு விமானம் செல்ல 5 மணி நேரம் தாமதமானதை அடுத்து, அங்கு காத்திருந்த பயணிகள் அனைவரும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜெட்2 நிறுவனம், மான்செஸ்டரிலிருந்து Ibiza நோக்கி சென்ற LS171 விமானம், நேற்று மாலை பயணி ஒருவரின் மருத்துவ தேவைக்காக Toulouse க்கு திசை திருப்ப பட்டது.

ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த பயணி உயிரிழந்துவிட்டார். இந்த கடிமான நேரத்தில் அவருடைய குடும்பத்தாருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், அந்த நபர் மதுபானத்தில் வெள்ளை நிறத்திலான ஏதோ ஒரு கலவையை கலந்து குடித்தார். அதன் பின்னர் சில நிமிடங்களில் அவருடைய இருக்கையை மோசமாக ஆட்ட ஆரம்பித்தார்.

இதனை பார்த்த பெண் விமானிகள் இருவர், அவரை விமானத்தின் முன் பகுதிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அழைத்தனர்.

குழந்தைகளுடன் வந்திருந்த நாங்கள் அனைவருமே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஒரு பதற்றத்துடனே இருந்தோம் என நடந்தவற்றை விளக்கியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers