இளவரசி மெர்க்கல் போன்றே தனது காதலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை பிரியங்கா

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தங்கள் திருமணத்தின்போது, ஒருவர் மடியில் ஒருவர் கை வைத்து அமர்ந்திருந்ததுபோன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை அரச குடும்பம் வெளியிட்டது.

அதில், கருப்பு நிற ஆடையில் மேகன் மெர்க்கல் மற்றும் ஹரி அமர்ந்திருந்த புகைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இளவரசி மெர்க்கலின் நெருங்கிய தோழியும் நடிகையுமான பிரியங்கா சோப்ரா தன்னை விட பத்துவயது குறைவான பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில், தனது தோழியும், இளவரசியுமான மெர்க்கலின் நிச்சயதார்த்த புகைப்படத்தை போன்று இவர்களும் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.

மெர்க்கல் ஜோடி எப்படி போஸ் கொடுத்திருந்தார்களோ, அதே போன்று பிரியங்கா ஜோடியும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்கள். இந்த இரு புகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers