உங்க பொண்ணு சடலத்தை பார்க்காதீங்க: மகளை இழந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம் பெண் மரணமடைந்த நிலையில் அவரின் சடலத்தை சுடுகாடு ஊழியர்கள் பாதுகாக்க தவறிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் சோனியா டோர் (60). இவரின் மகள் கேப்ரி சிறுநீரக செயலிப்பால் சமீபத்தில் மரணமடைந்தார்.

இதையடுத்து அவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 31-ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கேன் இறுதிச்சடங்கு நிறுவனம் மூலம் சுடுகாட்டில் கேப்ரியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த சோனியா சடலத்தை அவர்களிடம் கொடுத்தார்.

ஆனால் சடலத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கவும், பதப்படுத்தவும் அந்நிறுவனம் தவறியதால் கேப்ரியின் சடலம் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருந்துள்ளது.

இதையடுத்து சடலத்தை நீங்கள் பார்க்க வேண்டாம் என சோனியாவிடம் அதன் ஊழியர்கள் கூறிய நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சோனியா கூறுகையில், என் மகள் சடலத்தை அவர்கள் பாதுகாப்பாகவும், பதப்படுத்துவதாகவும் கூறிய நிலையில் அதை செய்யவில்லை.

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.

இதனிடையில் இச்சசெயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள கேன் இறுதிச்சடங்கு நிறுவனம், இறுதிச்சடங்குக்காக சோனியாவிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டதாவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers