லாட்டரி பில்லியனர் அதிரடி கைது: 9 வருடங்களுக்கு பின் அம்பலமான உண்மை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் போலி லாட்டரியின் மூலம் 2.5 மில்லியன் பவுண்டுகளை வென்ற நபர், 9 வருடங்களுக்கு பின்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த Edward Putman என்ற 53 வயது நபர் கடந்த 2009-ம் ஆண்டு லாட்டரியில் மூலம் 2.5 மில்லியன் பவுண்டுகளை வென்றார்.

ஆனால் அவருடைய டிக்கெட் போலியானது என புகார் எழுந்தது. இதனையடுத்து ஹெர்ட்ஃபோர்ட்ஷைரின் தீவிர மோசடி மற்றும் சைபர் பிரிவினால் கடந்த 2015-ம் ஆண்டு விசாரணை துவங்கப்பட்டது.

இதனடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த Edward-ற்கு அக்டோபர் 16 ம் தேதியன்று செயின்ட் அல் ஆல்பன்ஸ் மஜிஸ்திரேட்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த விசாரணையில் Edward போலி லாட்டரி டிக்கெட்டினை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது Edward-ஐ பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers