இந்திய வம்சாவழியினரை சித்திரவதை செய்து கொன்ற பிரித்தானியர்கள்: தீர்ப்பு விவரம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்திய வம்சாவழியினரான நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கடத்தி சித்திரவதை செய்து அவரது உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்த இன்னொருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களது தீர்ப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Leicesterஇல் நகைக்கடை நடத்தி வரும் Ramniklal Jogiya (74) கடையிலிருந்து வீடு திரும்பும்போது Thomas Jervis (24) மற்றும் Charles Mcauley (20) ஆகிய இருவரும் அவரைக் கடத்திச் சென்றனர்.

அவரது கைகால்களைக் கட்டிய அவர்கள் அவரது கடையில் நகைகள் வைக்கப்பட்டுள்ள லாக்கரின் ரகசிய எண்ணைக் கேட்டு அவரை மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் தாக்கியதில் Ramniklalஇன் கை தசை எலும்பிலிருந்து பிய்ந்து வந்திருக்கிறது, இடது விலாவில் ஆறு எலும்புகள் உடைந்திருக்கின்றன, கைகளிலும் விரல்களிலும் பல இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவரைக் கடும் குளிரில் வீசியெறிந்துவிட்டு சென்று விட்டனர்.

பொலிசாரும் மருத்துவக் குழுவினரும் வந்து பார்க்கும்போது Ramniklal உயிருடன் இல்லை. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கொள்ளையைத் திட்டமிட்ட Jervisக்கு குறைந்தபட்சம் 33 ஆண்டுகளும், Mcauleyக்கு 30 ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றத்திற்கு உதவியாக இருந்த Callan Reeve (20) என்பவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லாக்கரின் ரகசிய எண்ணைக் கேட்டு 300,000 பவுண்டுகள் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக பர்தா அணிந்து சென்ற Jervisஆல் லாக்கரை திறக்க இயலாததால், நகைகளைக் கொள்ளையடிக்க இயலாமல் வெறுங்கையாக திரும்பினான் என்பது வழக்கில் சுவாரஸ்யமான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers