மேகன் மெர்க்கலுக்கு கிடைத்த புதிய நண்பர்: மூக்கில் விரலை வைக்கும் அரச குடும்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
694Shares
694Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி தற்போது அதிக நேரம் செலவிடுவது தனது புதிய நண்பருடன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்ட பின்னர் அரச குடும்பத்து உறுப்பினர்களின் செல்லப்பிள்ளையானார் மேகன் மெர்க்கல்.

முதலில் இளவரசர் வில்லியத்தின் மனைவியிடம் நெருக்கமான மெர்க்கல், அதன் பின்னர் இளவரசர் சார்லஸின் மனைவியான காமிலாவிடன் நெருங்கி பழகினார்.

அனைவரும் மரியாதை கலந்த பயத்துடன் அணுகும் மகாராணியிடமும் மெர்க்கல் தமது நட்பை விரிவு படுத்திக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இளவரசர் சார்லஸிடம் அதிக நெருக்கமுடன் பழகுவதாகவும், இருவரும் ஒன்றாக புத்தகங்கள் வாசிப்பதும், உணவருந்துவதும், அரண்மனைக்குள் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் என மெர்க்கல் பரபரப்பாக காணப்படுகிறாராம்.

இவர்கள் இருவர் மட்டுமல்ல, கூடவே ஹரியும் இந்த கூட்டணியில் கலந்து கொள்வதுண்டாம்.

மட்டுமின்றி மேகன் விடயத்தில் இளவரசர் சார்லஸ் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், இளவரசர் ஹரிக்கு உகந்த மனைவி தான் மெர்க்கல் எனவும் சார்லஸ் பெருமையாக பேசி வருகிறாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்