பிரித்தானிய பெற்றோருக்கு உங்கள் மகள் குறித்து ஒரு எச்சரிக்கைச் செய்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா
238Shares
238Shares
lankasrimarket.com

பிரித்தானிய பள்ளிகளில் மாணவிகள் தங்கள் தோழிகளை பெண்ணுறுப்புச் சிதைவு செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதாக பிரபல மனவியல் நிபுணர் ஒருவர் திடுக்கிடும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல மனவியல் நிபுணரும் பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிராக போராடி வருபவருமான Leyla Hussein பத்திரிகையாளர்கள் மாநாடு ஒன்றில் பேசும்போது இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

பெண்ணுறுப்புச் சிதைவு என்னும் கோரப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவரான Leyla, அவரைப் போன்றே பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக Dahlia Project என்னும் திட்டத்தை 2013ஆம் ஆண்டு தொடங்கினார்.

பல இளம்பெண்களைச் சந்தித்துள்ள Leyla, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவதை விட, பல நாடுகளில் கலாச்சாரம் என்ற பெயரால் நிகழ்த்தப்படும் பெண்ணுறுப்புச் சிதைவு என்னும் கோரத்திற்கு ஆளாகும் அபாயத்திலிருப்பதாக பல இளம்பெண்கள் தெரிவிப்பதாகக் கூறுகிறார்.

தான் சந்தித்த பல இளம்பெண்கள் லண்டனிலுள்ள ஒரு பள்ளியின் விளையாட்டுத் திடல் ஒன்றில் இருக்கும்போது தங்கள் தோழியரால் பெண்ணுறுப்புச் சிதைவை செய்து கொள்ளுமாறு அழுத்தத்திற்குள்ளானதாக தெரிவித்துள்ளதாகக் கூறுகிறார், அதாவது பெண்ணுறுப்புச் சிதைவு என்னும் பழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் பிரதானமாக கண்ணப்படுவதாக எண்ணப்படும் நிலையில் பிரித்தானியாவிலேயே அதை ஆதரிக்கும், மற்றவர்களை அதை செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் ஒரு கூட்டம் இருப்பதாக அவர் எச்சரிக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய சட்டங்களை அமலாக்கும் ஏஜன்சிகள் பெண்ணுறுப்புச் சிதைவு தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதை மேம்படுத்துதல் தொடர்பான பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த குறிப்பிட்ட குற்றத்தை செய்யும் குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்படுவோரை அடையாளம் காணும் நோக்கில் செய்யப்பட்டுள்ள இந்த பிரகடனத்தில் தேசிய பொலிஸ் தலைவர்கள் கவுன்சில், பிரித்தானிய எல்லைப்படை, FBI மற்றும் அமெரிக்க Homeland Security துறை ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில் 2017 ஏப்ரல் முதல் மார்ச் 2018 வரை மட்டுமே சுமார் 5000 பிரித்தானிய பெண்களும் சிறுமிகளும் பெண்ணுறுப்புச் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்