வெளிநாட்டுக்கு செல்லும் மகளுக்காக கோடீஸ்வர தந்தையின் அசரவைக்கும் செயல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வர தந்தை ஒருவர் தனது மகளை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புவதற்காக அவருக்கு உதவியாக 12 வேலையாட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து அசரவைத்துள்ளார்.

தனது அன்பு மகள் இந்தியாவில் வீட்டில் இருக்கும்போது எப்படி பாதுகாப்பாக இருந்தாரோ அதே பாதுகாப்போடு வெளிநாட்டிலும் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் அந்த கோடீஸ்வர தந்தை,

ஸ்கொட்லாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் மகள் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து தி சன் வெளியிட்டுள்ள விளம்பர செய்தியில், கல்லூரியின் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க அவருக்கு உதவி செய்ய 12 ஊழியர்கள் வேண்டும்.

மாளிகையில் குடியிருந்து சமைக்கப்பட்ட உணவுகளை மகளுக்கு வழங்கவேண்டும், ஒரு சமையல்காரர், ஒரு பெண் பணிப்பெண், ஒரு பணியாளர், ஒரு ஓட்டுனர், ஒரு தோட்டக்காரர், ஒரு வீட்டு மேலாளர், மூன்று வீட்டு காவலாளிகள் மற்றும் மூன்று காலாட்பணிகள் ஆகிய பதவிகளுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என பெற்றோர்கள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு ஆண்டு சம்பளம் 30 ஆயிரம் பவுண்டுகள் என கூறப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.28.5 லட்சமாகும்.

குடும்பம் மிகவும் முறையானது, அனுபவம் வாய்ந்த ஊழியர்களை விரும்புகிறோம் என விளம்பரம் செய்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்