கடன்களை திருப்பித் தர தயார்: பிரித்தானியாவில் கூறிய விஜய் மல்லையா

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானிய நிதீமன்றத்தில் வங்கிக் கடன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் வாங்கிய கடன்களை திருப்பித் தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி பணத்தை கடனாகப் பெற்றுவிட்டு, திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

அங்கு கைது செய்யப்பட்ட அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்திய அதிகாரிகள் மல்லையா மீது தொடர்ந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், தனது 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்று கடனை திருப்பித் தர தயாராக இருப்பதாகவும், அதற்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்