பிரித்தானியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்! மனைவியின் உயிரைக் காப்பாற்றிவிட்டு பலியான கணவனின் கடைசி நிமிட வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா
578Shares
578Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலின் போது மனைவியை காப்பாற்றிய கணவர் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன் அவருடன் இருந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 2017-ஆம் ஆண்டு Khalid Masood என்ற தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலின் போது அமெரிக்காவைச் சேர்ந்த Kurt Cochran(54) என்ற நபர் தன்னுடைய மனைவியான Melissa காப்பாற்றி தன்னுடைய உயிரை விட்டார்.

தங்களுடைய 25-ஆம் ஆண்டு திருமண நாளை இவர்கள் கொண்டாட வந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் Kurt Cochran தன்னுடைய மனைவியுடன் அங்கு நடந்து செல்வதும், காரை வைத்து அந்த தீவிரவாதி அங்கிருப்பவர்களை தாக்கிக் கொண்டு வரும் போது, Kurt Cochran தன்னுடைய மனைவியை தள்ளிவிட்டு விட்டு, காரில் சிக்கிக் கொண்டதும் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

தன்னுடைய உயிரைக் கொடுத்து மனைவியின் உயிரைக் காப்பாற்றி அவர் ஹீரோவாக இன்றளவும் பார்க்கப்படுகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்