விரைவில் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் அறிவிக்கப்போகும் நல்ல செய்தி: காட்டிக்கொடுத்த புகைப்படம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர் விரைவில் நல்ல செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள் என Bookmakers தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினருக்கு கடந்த இந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னரே மெர்க்கல் கர்ப்பமாக இருந்தததாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஒரு புதிய வாரிசு வரவிருக்கிறது என Bookmakers செய்தி வெளியிட்டுள்ளது.

மெக்கல் கர்ப்பமாக இருக்கும் செய்தியை விரைவிலேயே பிரித்தானிய அரச கும்பம் அறிவிக்கும் என கூறப்படுகிறது. இந்த வாரம் செப்டம்பர் 15 ஆம் திகதி இளவரசர் ஹரி 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

எனவே, இந்த பிறந்தநாளை முன்னிட்டு சந்தோஷமான செய்தி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மெர்க்கல் நீல நிற ஆடை அணிந்திருந்தார். அதில், அவரது சிறிய கர்ப்பிணி வயிறு தெரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...