இளவரசி டயானாவுடன் தொடர்பில் இருந்த ஆண்களின் பட்டியல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

மக்களால் அதிகம் விரும்பப்பட்ட பிரித்தானிய இளவரசி டயானா 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி கார் விபத்தில் உயிரிழந்தார்.

இளவரசர் சார்லஸை 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பின்னர், அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

மணவாழ்க்கை ஒத்துப்போகாத காரணத்தால் 1996 ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.

இவர் அரண்மனையை விட்டு வெளியேறி நாள் முதல் இவரது தனிப்பட்ட வாழ்க்கை பிரித்தானிய ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அதுவும் பல்வேறு ஆண்களுடன் இணைத்து டயானா கிசுகிசுக்கப்பட்டார்.

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து அரச குடும்பத்தின் மரியாதையை கெடுத்துவிட்டதோடு மட்டுமல்லாமல் இவர், தனது துபாய் காதலர் Dodi Fayed - யுடன் பழகி கர்ப்பமாக இருந்த காரணத்தால் அரச குடும்பத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இளவரசி டயானாவுக்கு மொத்தம் ஐந்து காதலர்கள் இருந்துள்ளனர். பிரபல இசை கலைஞர் Bryan Adams, ரக்பி விளையாட்டு வீரர் Will Carling, குதிரைப்படை அதிகாரியான James Hewitt, Oliver Hoare என்னும் ஓவியர், பின்னர் இறுதியாக கோடிஸ்வரர் Dodi Fayed.

Dodi Fayed-ருடன் காரில் செல்லும் போது தான் விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் அவர் குறித்த ஆவணப்படம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது, தனது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு குதிரையேற்ற பயிற்சி அளித்த குதிரையேற்ற வீரர் James Hewitt - உடன் சார்லஸ்டன் இருக்கும்போதே தொடர்பில் இருந்துள்ளார்.

ரக்பி விளையாட்டு வீரர் Will Carling மீது டயானாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர்கள் ஹார்பர் கிளப் ஜிம்மில் தான் முதன்முதலாக சந்தித்தனர். தனக்கு ரக்பி விளையாட தனியாக பயிற்சி அளிக்குமாறு டயானா Will Carling யிடம் கேட்டுள்ளார்.

Oliver Hoare என்னும் ஓவியர் டயானாவை விட 15 வயது மூத்தவர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவருடன் வாழ வேண்டும் என டயானா ஆசைப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருந்த நிலையில், தனது மனைவியை விட்டு பிரியாமல் ரகசியமாக டயானாவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

75 வயதான இவர் சமீபத்தில் தான் இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers