பிரித்தானியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்! காதலியை பறிகொடுத்த காதலன் சொன்ன உருக்கமான தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் காதலியிடம் திருமணத்தை பற்றி தெரிவிக்க காத்திருந்த நேரத்தில், அவர் தீவிரவாதி நடத்திய தாக்குதலினால் பரிதாபமாக இறந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 2017-ஆம் ஆண்டு Khalid Masood என்ற தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல் காரணமாக Andreea Cristea(31) என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தாக்குதல் நடந்த இரண்டு வாரங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரோமானியாவைச் சேர்ந்த Andreea Cristea என்ற பெண் லண்டனில் உள்ள தன்னுடைய காதலனான Andrei Burnaz-ஐ பார்க்க வந்துள்ளார்.

இருவரும் அங்கிருக்கும் வெஸ்மின்ஸ்டர் பாலத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது Khalid Masood காரை வைத்து அங்கிருக்கும் மக்கள் மீத் கண்மூடித்தனமாக மோதியதால், இதில் நடந்து சென்று கொண்டிருந்த Andreea Cristea மற்றும் Andrei Burnaz படுகாயமடைந்தனர்.

இதில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் Andreea Cristea சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Andrei Burnaz கூறுகையில், சம்பவ தினத்தன்று பாலத்தில் அனைவரும் ஓடிக் கொண்டிருந்தனர். இதனால் ஒரு வித பயம் ஏற்பட்டது. அப்போது திடீரென்று திரும்பி பார்க்கும் போது, அடுத்த நிமிடத்தில் கார் மோதியது.

அதன் பின் நான் Andreea Cristea-ஐ தேடிய போது அவள் காணவில்லை. இதனால் நான் அங்கிருக்கும் பொலிசாரிடம் கேட்டேன். ஆனால் அவர்களோ சரியாக பதில் கூறாமல், முதலில் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து அவள் ஆற்றில் குதித்தது தெரியவந்தது. அவளது கால் அடிபட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் என்று கூறியுள்ளார்.

Andrei Burnaz தன்னுடைய காதலியிடம் சம்பவதினத்தன்று திருமணத்தைப் பற்றி கூற இருந்த நேரத்தில், இது போன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்