இணையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரித்தானிய தாயார்: வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் இணையம் வாயிலாக பாலியல் தொழில் நடத்தி வந்த இளம் தாயார் ஒருவர் பொலிசில் சிக்கியுள்ளார்.

சட்டம் பயின்றுவரும் அந்த இளம் தாயார் தனது சொந்த குழந்தையை கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்துள்ள வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கியவர்.

பிரித்தானியாவின் Plymouth பகுதியில் குடியிருக்கும் 23 வயது எலிசபெத் என்ற இளம் தாயாரே தற்போது இணையம் வாயிலாக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பொலிசில் சிக்கியவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மூன்று மாத குழந்தையை கொடூரமாக தாக்கி மூளையில் இருந்து ரத்தம் கசியும் அளவுக்கு கொடுமைப்படுத்தியதாக எலிசபெத் மற்றும் அவரது கணவர் எரிக் மீது வழக்குப் பதியப்பட்டது.

ஆனால் குறித்த குற்றச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர். மேலும் குழந்தை விபத்தில் சிக்கியதாக கூறுவது நம்பும் வகையில் இல்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்போது எலிசபெத் இணையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு இரவுக்கு 850 பவுண்டுகள் கட்டணமாக வசூலித்ததாகவும், தமது ஆபாச படங்களை இணைத்து விளம்பரப்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி எலிசபெத்தின் விளம்பர பக்கத்தை பார்வையிட்ட சிலர் அந்த விளம்பரம் தொடர்பில் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தமது கணவரின் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டே தாம் இந்த தொழிலில் ஈடுபட்டதாகவும், தம்மைவிட்டு பிரிந்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers