பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்! போனில் சிரித்துக் கொண்டே பேசிய ஆடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் மனைவியை 29 முறை குத்தி கொலை செய்த கணவன் அவசர உதவியை தொடர்பு கொண்டு பேசிய போது, அவள் இறந்துவிட்டாள் என்று சிரித்துக் கொண்டே கூறியது தொடர்பான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Shane Clarke(52). இவர் தன்னுடைய மனைவி Miss Bishop-ஐ screwdriver-ஐ வைத்து 29 முறை மார்பகத்திற்கு கீழே குத்தி கொடூரமாக தாக்கினார்.

இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், 4 தினங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினார்.

இது தொடர்பான வழக்கு Oxford Crown நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது Shane Clarke-க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி 20 ஆண்டுகள் பரோலில் வெளியவரமுடியாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மனைவியை கொலை செய்த Shane Clarke அவசர உதவியை தொடர்பு கொண்டு பேசியது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், அவர் நான் என் மனைவியை பல முறை குத்திவிட்டேன் என்று கூற, உடனடியாக எதிரே இருந்த அவசர உதவியைச் சேர்ந்த பெண் என்ன என்று மீண்டும் கேட்ட போது, நான் என் மனைவியை குத்திவிட்டேன் என்று மீண்டும் கூறியுள்ளார்.

இதனால் அந்த பெண் உடனடியாக அவருக்கு இரத்தம் அதிகம் வருகிறதா என்று கேட்ட போது, அவள் நான் இறந்துவிட்டேன் என்று நினைப்பதாக சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

அந்த பெண் என்ன சொல்கிறீர்கள் இறந்துவிட்டாரா என்று கேட்க, ஆம் அவள் இறந்துவிட்டதான நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். அந்த பெண் மீண்டும் மூச்சு விடுகிறாரா என்று கேட்க, நான் வீட்டிலே இல்லை, வெளியில் வந்துவிட்டேன் என்று கூற, உடனடியாக அவர் மீண்டும் வீட்டின் முகவரியை கேட்டு ஆம்புலன்சை அனுப்பியுள்ளார்.

மனைவியை கொடூரமாக குத்தி இரத்த வெள்ளத்தில் சாய்த்த பின், அவள் இறந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே கணவன் கூறியிருக்கும் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers