கணவருடன் இணைந்து 30 இளம் பெண்களை கொலை செய்த மனைவி: பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் குளோஸ்டர் பகுதியில் பாலியல் தொழிலாளியாக இருந்த பெண்மணி ஒருவர் தமது கணவருடன் இணைந்து முப்பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களை கொலை செய்துள்ளார்.

குறித்த கொலை வழக்கு தொடர்பில் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 61 வயதான ரோஸ் என்பவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நார்தம் பகுதியில் பிறந்த ரோஸ் என்பவர் தாம் பேருந்து நிறுத்தம் ஒன்றில் சந்தித்த Fred என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக குளோஸ்டர் பகுதியில் குடியேறினர்.

குளோஸ்டர் பகுதியில் வைத்து ரோஸ் பாலியல் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் குளோஸ்டர் பகுதியில் இளம் பெண்கள் மாயமாக தொடங்கினர்.

1992 ஆம் ஆண்டு தமது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைதான Fred பொலிஸ் விசாரணையில் இருந்து தப்பினார்.

Fred-ன் மகள் தந்தைக்கு எதிராக புகார் அளிக்க மறுத்ததே அதற்கு காரணம். இந்த நிலையில் பொலிசார் Fred மீது தீவிர கவனம் செலுத்தியதுடன், அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

இதனிடையே சிறுவர்களை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக ரோஸ் பிரித்தானிய பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

மட்டுமின்றி பொலிசாரின் தீவிர விசாரணையில் Fred மற்றும் ரோஸ் தம்பதி குடியிருந்த குளோஸ்டர் பகுதி குடியிருப்பில் இருந்து ஏராளமான இளம் பெண்களின் சடலங்களை மீட்டனர்.

Fred தமபதி கடந்த 1971 ஆம் ஆண்டில் இருந்து கொலை செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனையடுத்து நடந்த விசாரணையில் ரோஸ் 10 கொலை செய்ததாகவும் அவரது கணவர் 12-கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளதாகவும் அம்பலமானது.

விசாரணை கைதியாக இருந்த நிலையில் Fred சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிசாரிடம் நடத்திய ஒப்புதல் வாக்குமூலத்தில் தாம் இதுவரை 30 கொலைகள் செய்துள்ளதாக Fred தெரிவித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் ரோஸ் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Fred தமபதியால் கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களும் கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்