பிரித்தானிய இளவரசி மெர்க்கல் குறித்த ரகசியம் வெளியானது

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் சமீபத்தில் தீப்பற்றி எரிந்து 72 பேரின் உயிரிழப்புக்கு காரணமான Grenfell towerக்கு அடிக்கடி ரகசியமாக பயணித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் அந்த தீ விபத்திற்குப் பின் சமுதாயத்திற்காக இணைந்து சமைக்கும் ஒரு குழுவினருக்கு உதவுவதற்காக அங்கு சென்றுள்ளார் என்னும் உண்மை தெரியவந்துள்ளது.

Grenfell tower தீப்பற்றி எரிந்தபின் அதில் வசித்த பலரும் ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களில் சிலர் தங்கள் வீட்டு சமையலை அதிகமாகவே மிஸ் செய்தார்கள். அவர்களில் ஒருவர் Al-Manaar என்னும் இஸ்லாமிய கலாச்சார மையத்திற்கு சென்று அங்கு தாங்கள் தங்கள் உணவை சமைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

அங்கு அவர் சமைக்கத் தொடங்க, செய்தி பலருக்கும் பரவிற்று, பலரும் வந்து சமையலில் தங்கள் கைவண்ணத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள்.

இந்த செய்தியறிந்த மேகன் சமுதாயத்திற்காக சமைக்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக தானும் அவர்களை சந்திக்க ஆரம்பித்தார்.

இதுவரை பல முறை அவர்களை சந்தித்துள்ள மேகன் அவர்களுடன் சமைத்து மகிழ்ந்துள்ளதோடு, அவர்கள் எழுதியுள்ள ஒரு புத்தகத்திற்கு முகவுரையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு இளவரசி ஒரு சாதாரண பெண் போல தங்களுடன் வந்து வேலை செய்ததை தங்களால் நம்பவே இயலவில்லை என்கிறார்கள் அந்தப் பெண்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்