இளவரசி கேட்டை மேலாடையின்றி படம் எடுத்த வழக்கு: இன்று தீர்ப்பு வெளியாகிறது

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும் விடுமுறைக்காக பிரான்ஸ் சென்றிருந்தபோது, கேட்டை மேலாடையின்றி படம் எடுத்து பத்திரிகையில் வெளியிட்டதற்காக நஷ்ட ஈடு வழங்கப்பட்டதை எதிர்த்து பிரபல பத்திரிகை ஒன்று தொடர்ந்திருந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசர் வில்லியமும் கேட்டும் Closer என்னும் பத்திரிகையின் மீது சுமார் 1.3 மில்லியன் பவுண்டுகளும் La Provence என்னும் செய்தித்தாளின்மீது 42,000 பவுண்டுகளும் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

அதன்படி இளவரசியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதற்காக தம்பதியருக்கு 92,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்கப்பட்டது.

இனிமேல் இதுபோல் எந்த படத்தையும் பிரசுரிக்கக்கூடாது என்றும் பத்திரிகைகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நேரத்தில் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மெர்க்கலின் கவர்ச்சியான படங்களும் வீடியோ ஒன்றும் வெளியானதையடுத்து, அந்த பத்திரிகைகளின் வழக்கறிஞர்கள் ஏற்கனவே இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர்.

ராஜ குடும்பத்தார் கவர்ச்சியான படங்கள் குறித்து மகிழ்ச்சியடையத்தான் செய்வார்கள் என்பதை மேகன் மெர்க்கலின் படங்கள் நிரூபிப்பதாக வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.

தாங்களாக கவர்ச்சி படங்களை எடுத்துக் கொள்ளும்போது அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாமல் படம் எடுத்துவிட்டால் பெரும் தொகையை இழப்பீடாக கோருவார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு சட்டப்படியானதுதான் ஆனால், பிரைவஸியை மீறின ஒரே காரணத்திற்காக கொடுக்கப்பட்ட இழப்பீடு மிக அதிகம் என்று வாதாடினார் வழக்கறிஞர்.

நீதிபதிகளிடம் காட்டப்பட்டுள்ள படங்களின் பிரபல ஆண்கள் பத்திரிகை ஒன்றிற்காக மேகன் மெர்க்கல் போஸ் கொடுத்த கவர்ச்சியான படம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers