பிரித்தானிய இளவரசி மெர்க்கல் எதற்காக இப்படி இருக்கிறார்?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
330Shares
330Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் அரச குடும்பத்து மருமகளாகிவிட்ட நிலையிலும் அக்குடும்பத்தின் நவநாகரீக பழக்கத்துக்குள் தன்னை பொருத்திக்கொள்ளாமல் தனித்து நிற்கிறார் என மறைந்த இளவரசி டயானாவின் தோழி Lady Colin கூறியுள்ளார்.

இளவரசி டயானா சாதாரண குடும்பத்தில் இருந்து அரசகுடும்பத்து மருமகளாகிய பின்னர், இளவரசர் சார்லஸின் நண்பர்களுடன் எளிதில் ஒன்றிணைந்ததோடு மட்டுமல்லாமல் அக்குடும்பம் தொடர்பான நிகழ்ச்சிகளில் மிகவும் சாதாரணமாக கலந்துகொண்டார்.

ஆனால், இளவரசி மெர்க்கலை அவரது கணவர் தனது நண்பர்களிடம் அறிமுகப்படுத்துகிறார் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றாலும் அவர் தனித்தே காணப்படுகிறார். எளிதில் அரச குடும்ப பழக்கத்தில் ஐக்கியமாகவில்லை,

அரசகுடும்பத்துக்குள் ஐக்கியமாவது கடினமானது என்றாலும் டயானா, கேட் மிடில்டன் ஆகியவர்களை ஒப்பிடும்போது இவர் சற்று தயக்கத்தில் இருக்கிறார், அதற்கு கடந்த காலத்தில் தான் ஒரு நடிகை என்பதையே அவர் நினைவில் வைத்துக்கொண்டு, சற்று தடுமாறுகிறார் என Lady Colin கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்