பத்து நாளில் 17 ஜோடிகளை விவாகரத்து செய்ய வைத்த நபர்: அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
184Shares
184Shares
ibctamil.com

ஸ்காட்லாந்தை சேர்ந்த நகைச்சுவை நடிகரின் நிகழ்ச்சியை பார்த்து இதுவரை 4000 காதலர்கள் பிரிந்துள்ளதோடு, கடந்த 10 நாட்களில் மட்டும் 17 கணவன் - மனைவி விவாகரத்து பெற்றுள்ளனர்.

Netflix என்ற இணையதளத்தில் நகைச்சுவை நடிகர் டேனியல் ஸ்லோஸ் என்பவரின் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நேரடி நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்துவதை டேனியல் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் நடத்திய ஒரு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு 4000 காதலர்கள் பிரிந்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி டேனியல் பேசிய நிகழ்ச்சியை பார்த்துவிட்டு 17 கணவன் - மனைவி விவாகரத்து செய்துள்ளனர்.

உறவுமுறை குறித்த ஜோக்குகளை அதிகம் சொல்லும் டேனியல் விருப்பமில்லாத உறவுமுறையில் இருக்கக்கூடாது என சொல்கிறார்.

அவரின் பேச்சு பலரையும் ஈர்க்கும் நிலையிலேயே இது போல நடக்கிறது.

டேனியல் பேச்சை ரசித்து விவாகரத்து கோரிய ரசிகர் ஒருவர் சமுகவலைதளத்தில் எழுதுகையில், மூன்று ஆண்டுகளாக மோசமான திருமண வாழ்க்கையில் நான் இருந்தேன்.

உங்கள் நிகழ்ச்சி பார்த்ததும் தெளிவு வந்துவிட்டது, நீங்கள் நகைச்சுவையாக நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பலரும் டேனியல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்