குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம்தாய்க்கு நேர்ந்த அவமானம்: நடந்ததை கோபத்துடன் விவரித்த பதிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒரு காபிஷாப்பில் உட்கார்ந்து தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கேலி லூசி ரிலி (29) என்ற பெண் தனது குழந்தையுடன் Costa என்ற காபிஷாப்புக்கு சென்றுள்ளார்.

அங்கு குடிப்பதற்கு தேனீர் வாங்கும் முன்னர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார் லூசி.

இதையடுத்து எந்த உணவும் வாங்காமல் காபிஷாப் உள்ளே உட்காரக்கூடாது என ஊழியர் லூசியிடம் கூறிய நிலையில் அவர் வெளியேறியுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து லூசி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், தாய்ப்பால் கொடுத்தபின்னர் தேனீர் வாங்கி குடிக்கலாம் என இருந்தேன், ஆனால் அதற்குள் ஊழியர் என்னை வெளியேற சொன்னது அவமானமாக இருந்தது.

குறித்த Costa காபிஷாப்புக்கு யாரும் செல்லவேண்டாம் என கேட்டுகொள்கிறேன்.

இது குறித்து அவர்களின் வலைதளத்தில் கருத்து கேட்டேன். அதற்கு, இனி அங்கு சென்றால் கடை மேலாளரிடம் முதலிலேயே உங்கள் நிலையை கூறிவிட்டு உட்காருங்கள் என கூறினார்கள். அவர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில் இது குறித்து விளக்கமளித்துள்ள Costa செய்தி தொடர்பாளர், பாதிக்கப்பட்ட எங்கள் வாடிக்கையாளர் லூசியிடம் நாங்கள் வருத்தம் தெரிவித்துள்ளோம்.

வாடிக்கையாளர்களை நன்றாக கவனிப்பதில் நாங்கள் சிறப்பாகவே செயல்படுகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers