லண்டனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த காதலனை காப்பாற்றாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட காதலி!

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த காதலனை காப்பாற்றாமல் காதலி வீடியோ எடுத்து ஸ்நாப் சாட் ஆப்பில் பதிவேற்றம் செய்ததிற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் Khalid Safi. 18 வயதான இவர் பிரித்தானியாவிற்கு அகதியாக வந்து குடியேறியுள்ளார்.

இவரும் Fatima Khan(21) என்ற பெண்ணும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் லண்டனின் North Acton பகுதியில் இருக்கும் காபி செண்டருக்கு அருகே Khalid Safi-ஐ Raza Khan என்ற நபர் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

சம்பத்தின் போது அவரின் காதலியான Fatima Khan இரத்த வெள்ளத்தில் கிடந்த Khalid Safi-ஐ காப்பாற்றாமல், ஆம்புலன்சிற்கு போன் செய்யாமல் அதை வீடியோ எடுத்து ஸ்நாப் சாட் என்ற ஆப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவிற்கு கீழ் தெளிவாக குறிப்பிடாமல் இது தான் கதி என்று மட்டும் பதிவேற்றம் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில் அவருக்கு 14-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கொலை செய்த Raza Khan தற்போது வரை தலைமறைவாகவாக இருப்பதாகவும், வீடியோ எடுத்த Fatima Khan-மீது ஏற்கனவே பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு உள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி கொலை செய்த Raza Khan-ம் Khalid Safi-கும் ஏற்கனவே இந்த பெண்ணிற்காக சண்டை போட்டவர்கள் எனவும், கொலை செய்வதற்கு சில தினங்களுக்கு முன் தொடர்ந்து Fatima Khan போனில் Raza Khan-யிடம் பேசியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers